சடசடன்னு கொட்டப்போகுது கனமழை.. நெல்லை, குமரி மக்கள் இன்று கவனமா இருங்க! சென்னைக்கு வாய்ப்பு இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

11.01.2024 மற்றும் 12.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.01.2024 முதல் 16.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

Possibility of heavy rain in 2 districts of Tamil Nadu today

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அமராவதி அணை (திருப்பூர்) 12, பழனி (திண்டுக்கல்) 11, திருமூர்த்தி IB (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 10, திண்டுக்கல் (திண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) தலா 9, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 8, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7, பாம்பன் (ராமநாதபுரம்) 6, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்), கின்னக்கோரை (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 4, கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), கமுதி (ராமநாதபுரம்), பெரியகுளம் (தேனி), மஞ்சளாறு (தேனி), தாராபுரம் (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), திருப்பூர் PWD (திருப்பூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), நிலக்கோட்டை (சென்னை), கோடநாடு (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), கமுதி ARG (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), குன்னூர் (நீலகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 3, பல்லடம் (திருப்பூர்), ஆண்டிபட்டி (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), பார்வூட் (நீலகிரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சண்முகாநதி (தேனி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), பரமத்திவேலூர் (நாமக்கல்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), மூலனூர் (திருப்பூர்), அவினாசி (திருப்பூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), கேத்தி (நீலகிரி), கிளானிலை (புதுக்கோட்டை), கடனா அணை (தென்காசி), கிளன்மார்கன் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), பர்லியார் (நீலகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), தொண்டி (ராமநாதபுரம்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), மேல் பவானி (நீலகிரி), வைப்பாறு (தூத்துக்குடி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), திருச்சுழி (விருதுநகர்), கடவூர் (கரூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கூடலூர் (தேனி), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), ஆயிங்குடி (புதுக்கோட்டை), ராதாபுரம் (திருநெல்வேலி), பஞ்சப்பட்டி (கரூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), கொடுமுடி (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு), சின்கோனா (கோயம்புத்தூர்), கடம்பூர் (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), பெரம்பலூர் (பெரம்பலூர்), சாத்தூர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), வீரபாண்டி (தேனி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), திருவாடானை (ராமநாதபுரம்), திருப்புவனம் (சிவகங்கை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), இளையாங்குடி (சிவகங்கை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), தூத்துக்குடி (தூத்துக்குடி), எமரால்டு (நீலகிரி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), அவலாஞ்சி (நீலகிரி), நாமக்கல் (நாமக்கல்), கெத்தை (நீலகிரி), கோவிலங்குளம் (விருதுநகர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), அரவக்குறிச்சி (கரூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), ஈரோடு PTO (ஈரோடு), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), தென்காசி (தென்காசி), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 1." என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+