ரூட் கிளியர்.. 3 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் கனமழை! சென்னையிலும் இடி மின்னலுடன் ரெடியா இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.10.2023 முதல் 09.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 13, நாகர்கோயில் (கன்னியாகுமரி) 10, கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி) 8, அடையாமடை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி) தலா 7, பாலமோர் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 6, குழித்துறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 5, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4, சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சுரலாகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 3, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), வட்டானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2, பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), பெரியாறு (தேனி), தேக்கடி (தேனி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.10.2023: எச்சரிக்கை ஏதுமில்லை. 06.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications