பிச்சு உதறப்போகும் கனமழை.. இன்று முதல் தமிழ்நாட்டில் ஆட்டம் ஸ்டார்ட்! 5 நாட்கள் சம்பவம் இருக்கு
சென்னை: இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 8 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜனவரி 4 ஆம் தேதி மற்றும் ஜனவரி 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 6 ஆம் தேதி கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 7 ஆம் தேதி கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜனவரி 8 ஆம் தேதி கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி மற்றும் ஜனவரி 10 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேக்கடி (தேனி) 7, பெரியாறு (தேனி) 5, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 4, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, தேவாலா (நீலகிரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சோத்துப்பாறை (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, சண்முகாநதி (தேனி), பார்வூட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), உத்தமபாளையம் (தேனி), பெரியகுளம் (தேனி), நடுவட்டம் (நீலகிரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), பெரியபட்டி (மதுரை), எழுமலை (மதுரை), வீரபாண்டி (தேனி), கொடைக்கானல் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை), மஞ்சளாறு (தேனி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), காக்காச்சி (திருநெல்வேலி), கூடலூர் (தேனி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications