பிச்சு உதறப்போகுது கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்! அடுத்த 6 நாட்கள் அதிரடி சரவெடி காத்திருக்கு
சென்னை: இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 10.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023 மற்றும் 16.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 10, ஊத்து (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 9, காக்காச்சி (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 8, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) தலா 7, குன்னூர் PTO (நீலகிரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கோத்தகிரி (நீலகிரி) தலா 6, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 5, ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), கோடநாடு (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), பவானிசாகர் (ஈரோடு) தலா 4, கோடிவேரி (ஈரோடு), கருப்பாநதி அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பேரையூர் (மதுரை), சிவகிரி (தென்காசி) தலா 3, சத்தியமங்கலம் (ஈரோடு), திருநெல்வேலி (திருநெல்வேலி), ராஜபாளையம் (விருதுநகர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), களக்காடு (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பாம்பன் (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), குண்டாறு அணை (தென்காசி) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி), கழுகுமலை (தூத்துக்குடி), தென்காசி (தென்காசி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கடனா அணை (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), வைப்பாறு (தூத்துக்குடி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கிளானிலை (புதுக்கோட்டை), RSCL-2 கெடார் (விழுப்புரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), போடிநாயக்கனூர் (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சிவலோகம் (கன்னியாகுமரி), செந்துறை (அரியலூர்), அடவிநயினார் அணை (தென்காசி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications