அடிச்சு துவைக்கப்போகும் கனமழை.. 5 மாவட்ட மக்கள் ரெடியா இருங்க! நாளை இன்னும் உக்கிரமா இருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "நேற்று (15.09.2023) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது.

Possibility of heavy rain in 5 districts of Tamil Nadu today

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.09.2023 முதல் 20.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.09.2023 மற்றும் 22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 6, பொன்னேரி (திருவள்ளூர்) 5, கத்திவாக்கம் (சென்னை) 4, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அரிமளம் (புதுக்கோட்டை), மேட்டூர் (சேலம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வொர்த் எஸ்டேட் செருமுல்லி (நீலகிரி), புழல் ARG (திருவள்ளூர்), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), திருவள்ளூர், அவலாஞ்சி (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), சோழவரம் (திருவள்ளூர்), Rscl-2 நெமூர் (விழுப்புரம்), மணலி (சென்னை), புழல் (திருவள்ளூர்) தலா 2, கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), திரூர் Kvk Aws ( திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முகையூர் (விழுப்புரம்), ஆவடி (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்), மயிலாடி (கன்னியாகுமரி), மணம்பூண்டி (விழுப்புரம்), கிளானிலை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), நீடாமங்கலம் (திருவாரூர்), இரணியல் (கன்னியாகுமரி), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), ஆர்எஸ்எல்- 2 கேதார் (விழுப்புரம்), ஏதாப்பூர் (சேலம்), பூண்டி (திருவள்ளூர்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Possibility of heavy rain in 5 districts of Tamil Nadu today

18.09.2023: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+