வெடிச்சு கொட்டப்போகுது கனமழை.. டார்கெட் தெற்கு, மேற்கு! மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட் - அப்போ சென்னை
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

12.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023 முதல் 17.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அழகரை எஸ்டேட் (நீலகிரி), மண்டபம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) தலா 6, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 5, திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) 5, குலசேகரப் பட்டினம் (தூத்துக்குடி) 5, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 5, அருப்புக்கோட்டை (விருதுநகர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 4, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகர்), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3, பர்லியார் (நீலகிரி), விருதுநகர் AWS (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), குன்னூர் PTO (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி) தலா 2, கருப்பாநதி அணை (தென்காசி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), கல்லிக்குடி (மதுரை), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), விருதுநகர் (விருதுநகர்), கெத்தை (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), மண்டலம்4 பெருங்குடி (சென்னை), கோத்தகிரி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications