எகிறி அடிக்கப்போகும் மழை.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் பொளந்து கட்டப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.10.2023 முதல் 07.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்து (திருநெல்வேலி) 11, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 9, குண்டாறு அணை (தென்காசி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 8, சின்கோனா (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 6, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சுரளகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, சிற்றாறு-I (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), செங்கோட்டை (தென்காசி), பார்வூட் (நீலகிரி), பெரியாறு (தேனி), தேக்கடி (தேனி) தலா 4, சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அடவினனார்கோயில் அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி), கல்லணை (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), தேவாலா (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, கொளத்தூர் (சென்னை), திரு.வி.கே.நகர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), தென்காசி, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கொடவாசல் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), வேலூர் தலா 2, திருமானூர் (அரியலூர்), அம்பத்தூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), மணலி (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), ராயபுரம் (சென்னை), மலர் காலனி (சென்னை), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), KCS மில்-2 முரார்பாளையம் (கள்ளக்குறிச்சி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மயிலம்பட்டி (கரூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), ஏற்காடு (சேலம்), கடனா அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), எமரால்டு (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம், நன்னிலம் (திருவாரூர்), களக்காடு (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ஆவடி (திருப்பூர்), பொன்னேரி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), திருர் AWS (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications