வெடிச்சு கொட்டப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்! நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "நாளை (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.11.2023 முதல் 02.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 17, லால்பேட்டை (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 11, புவனகிரி (கடலூர்), கே.எம்.கோயில் (கடலூர்), வேப்பூர் (கடலூர்) தலா 9, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 8, பெலாந்துறை (கடலூர்), காக்காச்சி (திருநெல்வேலி), மரக்காணம் (விழுப்புரம்), கடலூர் (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி), சீர்காழி (மயிலாடுதுறை), மாஞ்சோலை (திருநெல்வேலி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 7, கீழச்செருவை (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), வடகுத்து (கடலூர்), குமாரபாளையம் (நாமக்கல்), அண்ணாமலை நகர் (கடலூர்), தொழுதூர் (கடலூர்), தழுதலை (பெரம்பலூர்), எறையூர் (பெரம்பலூர்) தலா 6, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), பவானி (ஈரோடு), லக்கூர் (கடலூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), விருதாச்சலம் (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), குப்பநத்தம் (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 5, குருவாடி (அரியலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), பாபநாசம் (திருநெல்வேலி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), SRC குடிதாங்கி (கடலூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), வலங்கைமான் (திருவாரூர்), மீ மாத்தூர் (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), நீடாமங்கலம் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 4, விழுப்புரம் (விழுப்புரம்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பாலவிடுதி (கரூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), மன்னார்குடி (திருவாரூர்), செந்துறை (அரியலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கிளானிலை (புதுக்கோட்டை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வனமாதேவி (கடலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), கொடவாசல் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), மண்டபம் (ராமநாதபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வீரகனூர் (சேலம்), ராயபுரம் (சென்னை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி) தலா 3, பொன்னமராவதி (புதுக்கோட்டை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), கின்னக்கோரை (நீலகிரி), தென்காசி (தென்காசி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), திருமானூர் (அரியலூர்), ஈரோடு PTO (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கடவூர் (கரூர்), ஓமலூர் (சேலம்), மிமிசல் (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அமராவதி அணை (திருப்பூர்), குண்டடம் (திருப்பூர்), பர்லியார் (நீலகிரி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), பூதலூர் (தஞ்சாவூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), பாண்டவரடி (திருவாரூர்), தலைவாசல் (சேலம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), திருவையாறு (தஞ்சாவூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), சிட்டம்பட்டி (மதுரை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கும்பகோணம் (தஞ்சாவூர்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 2, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), ஆயிங்குடி (புதுக்கோட்டை), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), தொண்டி (ராமநாதபுரம்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), செங்கோட்டை (தென்காசி), கடலாடி (ராமநாதபுரம்), உப்பாறு அணை (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), BASL முகையூர் (விழுப்புரம்), திருவாரூர் (திருவாரூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), இளையாங்குடி (சிவகங்கை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சூலூர் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), அன்னூர் (கோயம்புத்தூர்), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), திண்டிவனம் (விழுப்புரம்), செய்யார் (திருவண்ணாமலை), காயல்பட்டினம் (தூத்துக்குடி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கடனா அணை (தென்காசி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), பாம்பன் (ராமநாதபுரம்), திருப்பூர் PWD (திருப்பூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), கவுந்தப்பாடி (ஈரோடு), ஏற்காடு (சேலம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), RSCL அரசூர் (விழுப்புரம்), குண்டாறு அணை (தென்காசி), குருங்குளம் (தஞ்சாவூர்), கல்லணை (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பேராவூரணி (தஞ்சாவூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கெத்தை (நீலகிரி), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), அவலாஞ்சி (நீலகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), குந்தா பாலம் (நீலகிரி), ஆயிக்குடி (தென்காசி), பழனி (திண்டுக்கல்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), காரைக்கால் (காரைக்கால்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), அரூர் (தர்மபுரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), தாராபுரம் (திருப்பூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சென்னிமலை (ஈரோடு), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கருப்பாநதி அணை (தென்காசி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), வட்டானம் (ராமநாதபுரம்), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), செஞ்சி (விழுப்புரம்), மடத்துக்குளம் (திருப்பூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கேத்தி (நீலகிரி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), கழுகுமலை (தூத்துக்குடி), தம்மம்பட்டி (சேலம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), பெரியாறு (தேனி) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications