Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓங்கி அடிக்கப்போகும் கனமழை.. ஒன்பது மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது! சென்னையிலும் சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Possibility of heavy rain in 9 districts of Tamil Nadu today

13.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14.10.2023 மற்றும் 15.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

17.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மதுரை நகரம், மதுரை வடக்கு தலா 12, தல்லாகுளம் (மதுரை), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 10, பெரியபட்டி (மதுரை), பெரியகுளம் (தேனி) தலா 9, பொன்னமராவதி (புதுக்கோட்டை), சாத்தியார் (மதுரை) தலா 8, சோத்துப்பாறை (தேனி), விரகனூர் அணை (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை), மதுரை விமானநிலையம்,, கல்லிக்குடி (மதுரை), திருப்பூர் PWD, வாடிப்பட்டி (மதுரை), நத்தம் (திண்டுக்கல்), சண்முகாநதி (தேனி), நிலக்கோட்டை (சென்னை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), திருமங்கலம் (மதுரை) தலா 5, கின்னக்கோரை (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), ஆண்டிபட்டி (மதுரை), வெள்ளக்கோயில் (திருப்பூர்), கல்லந்திரி (மதுரை), மூலனூர் (திருப்பூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 4, பரமத்திவேலூர் (நாமக்கல்), சீர்காழி (மயிலாடுதுறை), திருப்புவனம் (சிவகங்கை), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மானாமதுரை (சிவகங்கை), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), காரியாப்பட்டி (விருதுநகர்), கல்லணை (தஞ்சாவூர்), கழுகுமலை (தூத்துக்குடி), அவினாசி (திருப்பூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 3, ஆயின்குடி (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), குன்னூர் (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்), கேத்தி (நீலகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), திருவாரூர், திற்பரப்பு (கன்னியாகுமரி), சிற்றாறு (கன்னியாகுமரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பாண்டவரடி (திருவாரூர்), நடுவட்டம் (நீலகிரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), கோத்தகிரி (நீலகிரி), ஏழுமலை (மதுரை), விருதுநகர், முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சோழவந்தான் (மதுரை), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), புலிப்பட்டி (மதுரை), நாமக்கல், கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), கயத்தார் (தூத்துக்குடி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 2, வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), தானியமங்கலம் (மதுரை), களியல் (கன்னியாகுமரி), பெரியகுளம் AWS (தேனி), பாலமோர் (கன்னியாகுமரி), போடிநாயக்கனூர் (தேனி), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), பேரையூர் (மதுரை), மதுரவாயல் (சென்னை), ஆண்டிபட்டி (தேனி), கொடவாசல் (திருவாரூர்), இடையப்பட்டி (மதுரை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), குந்தா பாலம் (நீலகிரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ராஜபாளையம் (விருதுநகர்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம், வளசரவாக்கம் (சென்னை), அரவக்குறிச்சி (கரூர்), கரூர் பரமத்தி, மேல் பவானி (நீலகிரி), குருங்குளம் (தஞ்சாவூர்), சிட்டம்பட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), கூடலூர் (தேனி), கருப்பாநதி அணை (தென்காசி), பழனி (திண்டுக்கல்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தர்மபுரி, குப்பணம்பட்டி (மதுரை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பேராவூரணி (தஞ்சாவூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), இலுப்பூர் (புதுக்கோட்டை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), தக்கலை (கன்னியாகுமரி), முகலிவாக்கம் (சென்னை), புதுச்சத்திரம் (நாமக்கல்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), குளித்தலை (கரூர்), தர்மபுரி PTO, கரூர், மேலூர் (மதுரை), உசிலம்பட்டி (மதுரை), பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), காரைக்குடி (சிவகங்கை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை." என்று குறிப்பிட்டதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+