பிச்சு உதறப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களில் சம்பவம் காத்திட்டு இருக்கு! சென்னை மக்கள் ரெடியா இருங்க
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.10.2023 முதல் 08.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.10.2023 மற்றும் 10.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மைலாடி (கன்னியாகுமரி) 11, குழித்துறை (கன்னியாகுமரி) 10, அணைகெடங்கு (கன்னியாகுமரி), கன்னியாகுமரி, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாம்பழத் துறையாறு (கன்னியாகுமரி) தலா 9, களியல் (கன்னியாகுமரி) 8, நாகர்கோயில் (கன்னியாகுமரி, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 7, பாலமோர் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 6, அடையாமடை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5, சிற்றாறு (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 4, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அரக்கோணம் (ராணிப்பேட்டை), பெரியாறு (தேனி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), கொரட்டூர் (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) தலா 2, அம்பத்தூர் (சென்னை), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), குண்டாறு அணை (தென்காசி), பூதலூர் (தஞ்சாவூர்), ஆவடி (திருவள்ளூர்), திருர் AWS (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 04.10.2023 மற்றும் 05.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் 04.10.2023 மற்றும் 05.10.2023: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்ரு குறிப்பிட்டு உள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications