அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம்! “இந்த” 4 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது - அந்த வெயில் மாநகரத்திலுமா?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், தினசரி வானிலை தகவல், வாராந்திர வானிலை கணிப்புகள் மட்டுமின்றி 3 மணி நேர வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த 3 மணி நேரம் திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில இடங்களில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. சாலைகள் வழுவழுப்பான தன்மையுடன் இருக்கும். சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம். பழமையான, பழுதடைந்த கட்டிடங்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன." என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட தினசரி அறிவிப்பில் "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9.10.2023 மற்றும் 10.10.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.10.2023 மற்றும் 12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35.36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாமைரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 5. திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி). குருந்தன்கோடு (ஈன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4. அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரம்பூர் (சென்னை). பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (மதுரை), பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணாநகர் [சென்னை]. சென்னை நுங்கம்பாக்கம், நிலக்கோட்டை (சென்னை), இந்துஸ்தான் பல்கலை ARG (காஞ்சிபுரம்), அடையாமடை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி). வாடிப்பட்டி (மதுரை), மணப்பாறை (நிருச்சிராப்பள்ளி), பாபநாசம் (திருநெல்வேலி}, சேர்வலாறு (திருநெல்வேலி), செய்யார் (திருவண்ணாமலை). போளூர் (திருவண்ணாமலை) தலா 2, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை). மாதவரம் (சென்னை), ராயபுரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பாலமோர் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி). களியல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), ஊழித்துறை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி). திருப்பதிசாரம் AWS (கன்னியாமைரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), உமனாமரத்தூர் (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications