பக்கா ஆக்சன் பேக்.. அந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை! 8 மாவட்டங்களில் மளமளவென கொட்டப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நேற்று (21-10-2023) காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (22-10-2023) காலை 0830 மணி அளவில் பரதீப் (ஒடிசா)-ற்கு தெற்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)- விற்கு தெற்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.

தேஜ் புயல்: நேற்று (21-10-2023) தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ்' புயல் நேற்று நண்பகல் தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று இரவு மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22-10-2023) காலை 0830 மணி அளவில் அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து 24-10-2023 அன்று மிகத்தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மழை வாய்ப்பு: 22.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2023 மற்றும் 26.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மேலூர் (மதுரை) தலா 5, சிங்கம்புணரி (சிவகங்கை) 4, தல்லாகுளம் (மதுரை), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), இடையப்பட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை), கல்லிக்குடி (மதுரை) தலா 3, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), விரகனூர் அணை (மதுரை), பேரையூர் (மதுரை), குளித்தலை (கரூர்), திருவாரூர் (திருவாரூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), காரியாப்பட்டி (விருதுநகர்) தலா 2, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), விராலிமலை (புதுக்கோட்டை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), திருப்புவனம் (சிவகங்கை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), மண்டலம்1 U32 மதுரவாயல் (சென்னை), மண்டபம் (ராமநாதபுரம்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), சென்னை மீனம்பாக்கம் (சென்னை), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), புலிப்பட்டி (மதுரை), மண்டலம் 06 திரு.வி.கே.நகர் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அரிமளம் (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), மண்டலம்4 பெருங்குடி (சென்னை), நத்தம் (திண்டுக்கல்), சாத்தூர் (விருதுநகர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications