அடிச்சு வெளுக்கப்போகுது மிக கனமழை..5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 19 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.11.2023 முதல் 14.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9, RSCL-2 கெடார் (விழுப்புரம்) 8, நீடாமங்கலம் (திருவாரூர்), கோடிவேரி (ஈரோடு), பாலக்கோடு (தர்மபுரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 7, கோடியக்கரை (மயிலாடுதுறை), ஏற்காடு (சேலம்), அம்மாபேட்டை (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 6, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மயிலாடுதுறை, திருவாரூர், கொத்தவாச்சேரி (கடலூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), மோகனூர் (நாமக்கல்), திருக்குவளை (நாகப்பட்டினம்), நன்னிலம் (திருவாரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 5, BASL மணம்பூண்டி (விழுப்புரம்), நாகப்பட்டினம், TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), மங்களபுரம் (நாமக்கல்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), எருமைப்பட்டி (நாமக்கல்), நாமக்கல், KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), ஆம்பூர் (திருப்பத்தூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), BASL முகையூர் (விழுப்புரம்), பெருந்துறை (ஈரோடு), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 4, கங்கவல்லி (சேலம்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), எறையூர் (பெரம்பலூர்), குமாரபாளையம் (நாமக்கல்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), வனமாதேவி (கடலூர்), கீழச்செருவை (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வேடசந்தூர் (திண்டுக்கல்), வைகை அணை (தேனி), வீரகனூர் (சேலம்), திண்டிவனம் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), அம்பத்தூர் (சென்னை), ராசிபுரம் (நாமக்கல்), பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), ஆத்தூர் (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), தொழுதூர் (கடலூர்), அரண்மனைப்புதூர் (தேனி), திருப்புவனம் (சிவகங்கை), கரூர், கொடவாசல் (திருவாரூர்), ஓமலூர் (சேலம்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), சங்கரி துர்க்கம் (சேலம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), செங்கம் (திருவண்ணாமலை) தலா 3, ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மீ மாத்தூர் (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர், மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கல்லிக்குடி (மதுரை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), சென்னை ஆட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி (கடலூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), தழுதலை (பெரம்பலூர்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), காட்பாடி (வேலூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), கருப்பாநதி அணை (தென்காசி), பண்ருட்டி (கடலூர்), கடவூர் (கரூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), கே.எம்.கோயில் (கடலூர்), வாடிப்பட்டி (மதுரை), வத்திராயிருப்பு (விருதுநகர்), பவானி (ஈரோடு), மணமேல்குடி (புதுக்கோட்டை), கும்பகோணம் (தஞ்சாவூர்), வேப்பூர் (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சோழவந்தான் (மதுரை), தேவகோட்டை (சிவகங்கை), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (ராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), தம்மம்பட்டி (சேலம்), சிவகிரி (தென்காசி), சத்தியமங்கலம் (ஈரோடு), கொடுமுடி (ஈரோடு), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), திருவண்ணாமலை, மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சேலம், ஆனைமடுவு அணை (சேலம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தர்மபுரி), காக்காச்சி (திருநெல்வேலி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), நிலக்கோட்டை (சென்னை), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை) தலா 2, அரவக்குறிச்சி (கரூர்), மண்டலம் 03 புழல் (சென்னை), கவுந்தப்பாடி (ஈரோடு), வி.களத்தூர் (பெரம்பலூர்), கின்னக்கோரை (நீலகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), எழுமலை (மதுரை), புதுச்சேரி AWS, மயிலம்பட்டி (கரூர்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பாண்டவரடி (திருவாரூர்), சண்முகாநதி (தேனி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மரக்காணம் (விழுப்புரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), SRC குடிதாங்கி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), வலங்கைமான் (திருவாரூர்), செஞ்சி (விழுப்புரம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), லால்குடி (திருச்சிராப்பள்ளி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), லக்கூர் (கடலூர்), புதுச்சேரி, DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), புவனகிரி (கடலூர்), ஆண்டிபட்டி (மதுரை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி), கல்லந்திரி (மதுரை), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), கோயம்புத்தூர் விமான நிலையம், புழல் ARG (திருவள்ளூர்), கூடலூர் (தேனி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), காஞ்சிபுரம், RSCL-2 நேமூர் (விழுப்புரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), கரியகோவில் அணை (சேலம்), அவினாசி (திருப்பூர்), பஞ்சப்பட்டி (கரூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), காரைக்கால், கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), காட்டுமயிலூர் (கடலூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பரமத்திவேலூர் (நாமக்கல்), உசிலம்பட்டி (மதுரை), மாயனூர் (கரூர்), குப்பநத்தம் (கடலூர்), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), சோத்துப்பாறை (தேனி), மண்டலம்1 U32 மதுரவாயல் (சென்னை), வடகுத்து (கடலூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), சென்னை நுங்கம்பாக்கம், கொடைக்கானல் (திண்டுக்கல்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), புதுச்சத்திரம் (நாமக்கல்), பூதலூர் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), பெரியகுளம் (தேனி), பாடலூர் (பெரம்பலூர்), ஊத்து (திருநெல்வேலி), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), எடப்பாடி (சேலம்), அரூர் (தர்மபுரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), YMCA நந்தனம் ARG (சென்னை), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), ஈரோடு PTO (ஈரோடு), குருங்குளம் (தஞ்சாவூர்), சென்னை (N) AWS (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), அன்னூர் (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), கடல்குடி (தூத்துக்குடி), தென்காசி, சந்தியூர் KVK AWS (சேலம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), பொன்னை அணை (வேலூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications