டமால் டுமீல்..இடி மின்னலுடன் 4 நாள் மழை பெய்யலாம்! எந்த மாவட்டங்கள் தெரியுமா? கோவை,நீலகிரி கன்பார்ம்
சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேவாலா (நீலகிரி மாவட்டம்) 10, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) தலா 9, வொர்த் எஸ்டேட் செர் (நீலகிரி மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) தலா 6, மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்), சின்னக்களார் (கோயம்புத்தூர் மாவட்டம்), சோலையார் (கோவை மாவட்டம்), மேல் பவானி (நீலகிரி மாவட்டம்) தலா 5, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 4, வால்பாறை PTO (கோயம்புத்தூர் மாவட்டம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர் மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி மாவட்டம்), சிறுவாணி அடிவாரம் (கோவை மாவட்டம்) தலா 3, மரகதம் (நீலகிரி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), பெரியார் (தேனி மாவட்டம்), குண்டாறு அணை (தென்காசி மாவட்டம்), நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்) தலா 2, தேக்கடி (தேனி மாவட்டம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி மாவட்டம்) , பாலமோர் (கன்னியாகுமரி மாவட்டம்), உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்), சித்தார் (கன்னியாகுமரி மாவட்டம்) , கடனா அணை (தென்காசி மாவட்டம்) கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர் மாவட்டம்), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர் மாவட்டம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), க்ளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகள்: 08.07.2023 முதல் 10.07.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.07.2023, 12.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.07.2023, 12.07.2023 : இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 08.07.2023: இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.07.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications