இடி, மின்னலுடன்.. இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நவம்பர் 16 ஆம் தேதி அக்வான் புயலாக மாறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert for 4 Tamil Nadu Districts Until 10 PM

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்று (நவம்பர் 14) தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 15) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 840 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 16) புயலாகவும், நாளை மறுநாள் (நவம்பர் 17) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து மாலத்தீவு வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக, வரும் நவம்பர் 17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 18 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 19 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அத்துடன், நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+