நீலகிரியின் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. புதுச்சேரி மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கும் லீவ்
நீலகிரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், புதுச்சேரியின் மாஹேவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தொடக்கத்தில் மந்தமாக இந்த பருவமழை இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தொடர் மழை மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாணவ - மாணவிகளின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்தா தனீரு வெளியிட்டுள்ளார்.
அதேபோல் புதுச்சேரியின் மாஹேவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாஹேவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காராக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஹே பிராந்தியம் என்பது கேரளாவை ஒட்டியுள்ளது.
கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மாஹேவில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் எனவும் பிராந்திய நிர்வாகி மோகன்குமார் அறிவித்துள்ளார். இதன்மூலம் தேர்வு உள்ளவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications