வானம் கருக்குது.. 31 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்! எந்தெந்த ஏரியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாடு முழுக்க 31 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்பட 31 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

31 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்: திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய 25 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

weather rain chennai

அதேபோல, இன்று இரவு 7 மணிக்குள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 ஆம் தேதி வரை மழை இருக்கு:
லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அரலட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

weather rain chennai

அதன்படி, இன்று மற்றும் நாளை (அக்டோபர் 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மழை நிலவரம்: சென்னையை பொறுத்தவரையில், இன்று 7 மணிக்குள் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+