Rain Alert: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம் ஜில் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (செப்டம்பர் 29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Rain tamilnadu

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று (செப்டம்பர் 29) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்து கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு பகுதியில் 40 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), சின்கோனா, வால்பாறை ஆகிய பகுதிகளில் 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+