தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசப்படும் என்றும் கணித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

Rain Weather Chennai Rains

அதேபோல் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்றை போல் நாளையும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையியில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப நிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும். இன்று அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டியே இருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும்ஜ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முத; 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மாலை நேரங்களில் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+