சென்னைக்கு இன்றும் சம்பவம் இருக்கு.. தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழைக்கு (Rain Continues in Chennai Today) வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கோவை, நீலகிரியில் கனமழை கொட்டும் எனவும், பிற மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் அடித்தாலும் மாலை நேரத்திற்கு பிறகு கிளைமேட் மாறியது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு திடீரென கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதி கனமழை கொட்டியதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rain Chennai

அதாவது நேற்று சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக மணலியில் ஒரே நாளில் 27 செமீ மழை பதிவாகியுள்ளது. இதில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 12 செமீ மழை பெய்தது எனவும், 10 செமீட்டருக்கு மேல் ஒரு மணி நேரத்தில் மழை பெய்தால் அது மேகவெடிப்பு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றும் தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் இன்று தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்ட வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+