சென்னை உள்பட 14 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரம்.. பிச்சு உதறப் போகுது மழை.. மக்களே அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை, தென்காசி, குமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்றும் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வரும் நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Rain expected in 14 districts including Chennai within the next 3 hours

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குறிப்பாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, தேனி, தென்காசி, குமரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதி என 10 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் நெல்லை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

8 செமீ கொட்டிய மழை

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 8 செமீ, மேல் பவானி (நீலகிரி) 7 செமீ, உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 6 செமீ, தேவாலா (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 5 செமீ, மேல் கூடலூர் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 4 செமீ, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி), பார்வூட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும்

நாளை மறுநாள் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

1 ஆம் தேதி கோவை, நெல்லை மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்றும் நாளையும்..

சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+