செங்கல்பட்டு டூ தூத்துக்குடி.. வங்கக்கடலோர மாவட்டங்கள் டார்கெட்! அடுத்த 2 மணி நேரத்தில் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அடுத்த 2 மணி நேரத்தில் செங்கல்பட்டு தொடங்கி, தூத்துக்குடி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவங்கள் மழையை கொடுக்கும். அதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி பாதிவரை வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

weather rain tamil nadu

இன்று 9 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி,

செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும்.

முன்னதாக நேற்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று(ஜன.14), தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜன.15ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16 தொடங்கி 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+