சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு விடாமல் கொட்டப் போகும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வெப்பநிலையும் இன்று முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகல் நேரங்களில் கோடைக் காலத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆனால் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Rain

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்

சுமார் 0.9 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

08-09-2026: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர்..

09-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

10-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

11-09-2026: கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

14 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

12-09-2026: மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

13-09-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 14-09-2026: வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

08-09-2026 முதல் 12-09-2026 வரை: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் கிளைமேட் எப்படி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (08-09-2026) மற்றும் நாளை (09-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்: 10-09-2026 முதல் 12-09-2026 வரை: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 6, சாத்தியார் (மதுரை), சோழவரம் (திருவள்ளூர்) தலா 5. திண்டுக்கல் (திண்டுக்கல்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), பூண்டி (திருவள்ளூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 4, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), சென்னை (N) AWS (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 3, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), எம்ஜிஆர் நகர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 2, பேரையூர் (மதுரை), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), உசிலம்பட்டி (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை). கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி) தலா 1" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+