ஒடிசா போச்சே காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2 வரை மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு சான்ஸ்
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று (26.07.2023) வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27.07.2023) தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 02.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

க்ளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) 7, சின்னகல்லாறு (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) தலா 5, அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 4, மேல் பவானி (நீலகிரி), ஆயின்குடி (புதுக்கோட்டை) தலா 3, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), நகுடி (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்), அரிமளம் (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), திற்பரப்பு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 2, பெரியார் (தேனி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), திருமயம் (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), கிளானிலை (புதுக்கோட்டை),தேக்கடி (தேனி), உதகமண்டலம் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications