சென்னையில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை.. வெளுத்து எடுத்த கனமழை! ஜில்லென மாறிய கிளைமேட்
சென்னை: சென்னையில் திடீரென இன்று இரவு காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. பகல் முழுக்க வெயில் வெளுத்து எடுத்த நிலையில், இன்று இரவு திடீரென கிளைமேட் மாறி மழை வெளுத்து வாங்கியுள்ளது. அமைந்தகரை, கோயம்பேடு, பூந்தமல்லி என சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மே மாதத்தில் வெயிலின் தாக்கம் வழக்கமாக அதிகமாக இருக்கும். ஆனால், மே மாதத்தில் இடையிடையே சில நாட்கள் மழை பெய்தது. இதனால் கிளைமேட் மாறி மாறி இருந்தது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவுக்கே வானிலை நிலவியது.

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை இருந்தது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. காலை 8 மணிக்கெல்லாம் வெயில் தனது கோர முகத்தை காட்டியது.
நண்பகல் வேளையில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. சென்னை எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, பூந்தமல்லி என சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications