நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. தினம் தினம் அதிகரிக்கும் வெயிலால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தகிக்கிறது.

Rain is likely across 15 districts of Tamil Nadu until 1 AM

நள்ளிரவு 1 மணி வரை..

பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்விக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை அவ்வப்போது மாலை அல்லது இரவு நேரங்களிலும் மழை கொட்டி வருகிறது. அவ்வப்போது காலை நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

15 மாவட்டங்கள் என்னென்ன?

தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 16 ஆம் தேதி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நாளை கிளைமேட் எப்படி?

சென்னையில் நாளை திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+