அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் வெளுக்க போகும் மழை.. மேலும் 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், திருநெல்வேலி, குமரி என 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, குமரி, திருநெல்வேலி, தேனி, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain tamilnadu

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று (31-08-2024) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (01-09-2024) அதிகாலை 00300230 மணி அளவில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஓரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடந்தது. 01.09.2024: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

02.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.09.2024 முதல் 07.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+