Chennai Rain : ஓவர் நைட்ல மாறிடுச்சே..சென்னை இரவை இடி மின்னலுடன் இதமாக்கிய மழை! ஜோராக பெய்திருக்கே
சென்னை: தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டித் தீர்த்ததால் தலைநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படுவதும், இரவில் ஆங்காங்கே மிதமான மழை பெய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் காலையில் இருந்தே வெயில் கடுமையாக இருந்தது. ஆனால், மாலை நேரத்தில் மேகமூத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு கனமழை கொட்டித் தீர்த்தது.

மத்திய சென்னை, தென்சென்னை, வட சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் பல மணி நேரம் மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி 20.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை அண்ணாநகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, அசோக் நகர், மாம்பலம், தியாகராய நகர், ஆலந்தூர், கிண்டி, நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தாம்பரம், வண்டலூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் என சென்னை புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை காணப்பட்டது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் இரவில் நல்ல மழை பெய்துள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து இருக்கிறது. வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
South #Chennai has seen solid rains from a thunderstorm that pushed in from west.
— Hrishi Jawahar (@jhrishi2) July 12, 2023
Few notable numbers (in mm):
Shollingnallur - 61
Perumbakkam - 60
Uthandi - 57
Palavakkam - 54
Perungudi - 34#Chennairains #Monsoon2023 pic.twitter.com/qVgW1FfLoX
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications