அடுத்த 2 மணி நேரத்தில்.. தமிழகம் முழுக்க 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கும் அலர்ட்
சென்னை: தமிழகம் முழுக்க 32 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள், தஞ்சை, புதுக்கோட்டை, புதுவை உள்ளிட்ட இடங்களிலும் இன்று மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

32 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோல் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தர்மபுரி, வேலூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று 18-09-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர். வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடதுார். பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை கொட்டும்?
19-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
21-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனழ பெய்யவாய்ப்புள்ளது.
22-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 23 மற்றும் 24 ஆம் தேதி மிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (18-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (19-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
18-09-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 19-09-2025 முதல் 21-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
18-09-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி / சற்று குறைவாக இருக்கக்கூடும். 19-09-2025 முதல் 21-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 8,
* திருப்பூர் தெற்கு (திருப்பூர்), ஆலங்காயம் (இருப்பத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 7.
* காரைக்கால் (காரைக்கால்), மின்னல் (ராணிப்பேட்டை), காரைக்கால் AWS (காரைக்கால்) 5.
* ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி). குடியாத்தம் (வேலூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), ஏற்காடு (சேலம்), மணல்மேடு (மயிலாடுதுறை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5.
* பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), க.பரமத்தி (கரூர்), ஏற்காடு AWS (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஓரத்தநாடு (தஞ்சாவூர்), கயத்தார் (தூத்துக்குடி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி). திருப்பூர் PWD (திருப்பூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி) தலா 4 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications