அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், நெல்லை, குமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி என 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் ஜில் அப்டேட்டை வானிலை மையம் கொடுத்துள்ளது. சென்னையிலும் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெயிலில் தகித்த கிளைமேட் நேற்று ஜில்லென மாறியது.

அடுத்த 3 மணி நேரம்
கோடை வெயிலுக்கு இதமாக பெய்த மழையினால் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 4 மணி வரை) திண்டுக்கல், குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 18-03-2026 மற்றும் 19-03-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20 ஆம் தேதி எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
20-03-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 21-03-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22-03-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். 23-03-2026 மற்றும் 24-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் 2 நாளைக்கு மழை கொட்டும்
சென்னையில் இன்று (18-03-2026) மற்றும் நாளை (19-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு (செமீ)
* வரட்டுப்பள்ளம் (ஈரோடு) 9,
* கழுகுமலை (தூத்துக்குடி) 8,
* வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்). நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), உசிலம்பட்டி (மதுரை) தலா 5,
* காரைக்கால் (காரைக்கால்), காரைக்கால் AWS (காரைக்கால்) தலா 4,
ஆண்டிபட்டி (மதுரை), பேரையூர் (மதுரை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), திருவாடானை (ராமநாதபுரம்), அம்மாபேட்டை (ஈரோடு). சாத்தியார் (மதுரை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை) தலா 3,
* சோலையார். (கோயம்புத்தூர்), சிவகாசி (விருதுநகர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). குப்பணம்பட்டி (மதுரை), பெரியாறு (தேனி) பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 2,
* வெள்ளக்கோயில் (திருப்பூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கோவில்பட்டி (தூத்துக்குடி). கல்லிக்குடி (மதுரை), நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்), கேத்தி (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தேனி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சங்கரன்கோயில் (தென்காசி) தலா 1. என்று கூறப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications