அடுத்த 3 மணி நேரம்.. விருதுநகர், தேனி, மதுரை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், திருச்சி, தஞ்சை, தேனி என 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்றும் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

வெளுத்து வாங்கிய கனமழை
குறிப்பாக நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன்பிறகு சாரல் மழையாக மழை பெய்து வருகிறது. இதனால் காலையிலேயே பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். இதேபோல் மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, தஞ்சை, நெல்லை, தென்காசி என பல்வேறு மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் தான் மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
11 மாவட்டங்கள் என்னென்ன?
"தமிழகத்தில் இன்று மாலை 1 மணி வரை திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று பெய்த மழை அளவினை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு (செமீ):
மழை அளவு
* வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 13 செமீ,
* திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 10,
* செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்). சீர்காழி (மயிலாடுதுறை), காரைக்கால் (காரைக்கால்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை தலா 8.
* வேதாரண்யம் AWS (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை AWS [மயிலாடுதுறை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்). கொள்ளிடம் (மயிலாடுதுறை, காரைக்கால் AWS (காரைக்கால்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 7,
* நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), கே.எம்.கோயில் (கடலூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சுத்தமல்லி அணை (அரியலூர்). மஞ்சளாறு (தஞ்சாவூர்), லால்பேட்டை (கடலூர்), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), ஊத்து (திருநெல்வேலி), கொடவாசல் (திருவாரூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்) தலா 5.
* திருவிடைமருதூர் (தஞ்சாவூர்). பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) நாலுமுக்கு (இருநெல்வேலி), குன்னூர் PTO (நீலகிரி), வலங்கைமான் (திருவாரூர்), குன்னூர் AWS (நீலகிரி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), நன்னிலம் (திருவாறார்), காக்காச்சி (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 4,
* பெரம்பலூர் (பெரம்பலூர்). மிமிசல் (புதுக்கோட்டை), செந்துரை ARG (அரியலூர்). மாஞ்சோலை (இருநெல்வேலி), புள்ளம்பாடி (இருச்சிராப்பள்ளி), அண்ணாமலை நகர் (கடலூர்). திருவாரூர் AWS (இருவாரூர். கும்பகோணம் (தஞ்சாவூர்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), அரியலூர் PTO (அரியலூர்), குருவாடி (அரியலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), அரியார் AWS (அரியலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), பாண்டவரடி (திருவாரூர்), குன்னூர் (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), பாடலூர் (பெரம்பலூர்). அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்). திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), பூகலூர் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications