குடையை ரெடியா வச்சுக்கோங்க! அடுத்த 3 மணி நேரம் விருதுநகர் - குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் விருதுநகர் முதல் குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விடைபெற்றுவிட்டது. எனினும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று குறிப்பாக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், காரைக்காலில் ஒருசில இடங்களிலும் மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில், இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் வெளியான வானிலை நிலவரத்தில், தமிழகத்தில் விருதுநகர் முதல் குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஞாயிற்றுக் கிழமைகளில் பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளைகளில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.3ஆம் தேதியான நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் பிப்.4 முதல் பிப்.8 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications