பிரேக் முடிந்து.. சீனுக்குள் வரும் மழை! நவ.2ம் தேதி முதல் சம்பவம் இருக்கு! வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்திருந்த நிலையில், தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், நவ.2ம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்று வட உள் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல, நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவ.2ம் தேதி திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மாநிலம் முழுவதும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ.3ம் தேதி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
