இன்று + நாளை.. 2 நாட்கள் சென்னை தான் டார்கெட்.. இடி, மின்னலுடன் கொட்டப்போகுது மழை.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே ஒருசில இடங்களில் வெயிலும், ஒருசில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், 30 -40 கி.மீ வேகத்தில் தரைக்காற்றும் வீசியது.

rain chennai

6 நாட்களுக்கு தொடரும்: நேற்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. கிருஷ்ணகிரி, கோவை, சேலைம், ராணிப்பேட்டை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பார்வூட், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (10.09.2024) மற்றும் நாளை (11.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.09.2024 முதல் 16.09.2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும்

சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் வானிலை மையம் கொடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் 10.09.2024 முதல் 11.09.2024 வரை தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.09.2024 முதல் 14.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோன்று 10.09.2024 அன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று: 11.09.2024 வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.09.2024 தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

55 கி.மீ வேகத்தில்: 13.09.2024 தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.09.2024 தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு (செமீ) தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) தலா 4; மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி) தலா 3; பார்வூட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்), நடுவட்டம் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ஆற்காடு (ராணிப்பேட்டை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2; பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை),

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), குளச்சல் (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வேலூர் (வேலூர்), தளி (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 1. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+