மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை.. இன்று மட்டும் 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. கோவை, நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வந்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

4 மாவட்டங்களில் கனமழை
இன்று சீர்காழியில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தான் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று (24-09-2025) காலை வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்-மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 17.30 மணி அளவில் வலுகுறைந்தது. இருப்பினும், இன்று (25-09-2025), வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வடமேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஓரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
நேற்று (24-09-2025) மத்திய மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (25-09-2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
27 ஆம் தேதி கரையை கடக்கும்
இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஓரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஓரிசா -வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை கொட்டும்
26-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 28-09-2025 முதல் 01-10-2025 வரை: தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
25-09-2025 முதல் 29-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.25-09-2025 முதல் 29-09-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 -ெல்சியஸ் இயல்பை விட அதிக இருக்கக்கூடும்.
சென்னையில் லேசான மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 25-09-2025 முதல் 28-09-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
25-09-2025: தெற்கு மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய தெற்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா ஓரிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-09-2025 முதல் 28-09-2025 வரை: தெற்கு மத்திய வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய தெற்கு வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள் மற்றும் ஆந்திரா ஓரிசா மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
25-09-2025: தென்மேற்கு மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா - கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-09-2025: தென்மேற்கு மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு கொங்கன் கோவா கர்நாடகா கேரளா கடலோரப்பகுதிகள்லும் வட்சர். 64 பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மழை அளவு செமீ
* மணல்மேடு (மயிலாடு துறை 6,
* மயிலாடுதுறை (மயிலாடுதுறை, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை).
* தரங்கம்பாடி (மயிலாடுதுறை தலா 4,
* மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), சிற்றாறு.) (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஜெயம்கொண்டம் ARG (அரியலூர்). சீர்காழி (மயிலாடுதுறை), ஜெயம்கொண்டம் (அரியர்). ராசிபுரம் (நாமக்கல்) தலா 3.
* கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி (கன்னியாகுமரி). முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 2.
* அவலாஞ்சி (நீலகிரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி) திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), ஆம்பூர் (இருப்பத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), சுத்தமல்லி அணை (அரியலூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), எமரால்டு (நீலகிரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி). திற்பரப்பு (கன்னியாகுமரி), கொத்தவாச்சேரி (கடலூர்), கூேஎம்.கோயில் (கடலூர்), தா.பழூர் (அரியலூர்). காரைக்கால் (காரைக்கால்), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), காரைக்கால் AWS (காரைக்கால்), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு {கன்னியாகுமரி), செந்துறை (அரியலூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணல்மேடு ARG (மயிலாடுதுறை). சின்கோனா (கோயம்புத்தூர்), ஊத்து (இருநெல்வேலி), குழித்துறை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்). சிவலோகம்(சிற்றாறு.) (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), நன்னிலம் இருவாரூர்), சேலம் (சேலம்) தலா 1. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications