சென்னையில் இன்னைக்கு இடி மின்னலுடன் மழை வெளுக்கும்.. அடுத்த ஒரு வாரம் இப்படித்தான்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் வரும் 24 ஆம் தேதி வரை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இனி அடுத்த ஒரு வாரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

27 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
இன்று 21-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 22-09-2025 முதல் 24-09-2025 வரை : வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-09-2025 முதல் 27-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழை கொட்டும்
இன்று (21-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (22-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. மழை அளவு சென்டிமீட்டரில்
* லால்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 6,
* மணல்மேடு (மயிலாடுதுறை), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5.
* கே.எம்.கோயில் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி),
* மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை தலா 4
* மயிலாடுதுறை (மயிலாடுதுறை), காரையூர் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை). இலுப்பூர் (புதுக்கோட்டை), பெரிய நாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), காரைக்குடி (சிவகங்கை), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 3,
சிங்கம்புணரி (சிவகங்கை), புதுக்கோட்டை ARG (புதுக்கோட்டை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்). திருச்சுழி (விருதுநகர்), ஊத்துக்குளி (திருப்பூர்), குன்னூர் PTO (நீலகிரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மரக்காணம் (விழுப்புரம்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), அவலாஞ்சி (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), குன்னூர் AWS (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), ஜெயம்கொண்டம் (அரியலூர்). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2,
மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), பார்வூட் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), ஆரணி (திருவண்ணாமலை), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்). ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), குன்னூர் (நீலகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), நியூ சென்னை டவுன்ஷிப் AWS (செங்கல்பட்டு), அறந்தாங்கி (புதுக்கோட்டை), அன்னூர் (கோயம்புத்தூர்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 21-09-2025 முதல் 23-09-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-09-2025 மற்றும் 25-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
21-09-2025: வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-09-2025 மற்றும் 23-09-2025: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-09-2025 மற்றும் 25-09-2025: மத்திய தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய- தெற்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் ஆந்திரா ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
மத்தியமேற்கு அரபிக்கடலின் சில 21-09-2025 முதல் 23-09-2025 வரை: தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 24-09-2025 மற்றும் 25-09-2025: தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications