Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும்.. சென்னையிலும் மழைக்கு சான்ஸ்.. வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்காசி, மதுரை, சிவகங்கை, குமரியில் பரவலாக மழை பெய்துள்ளது.

rain-to-continue-in-southern-districts-chances-of-showers-in-chennai-weather-department-update

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (10-11-2025) மற்றும் 11-11-2025 : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12, 13 ஆம் தேதி கனமழை வெளுக்கும்

12-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 14-11-2025 மற்றும் 15-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்

இன்று (09-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (10-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு (சென்டிமீட்டரில்):

* சிவகிரி (தென்காசி), சிட்டம்பட்டி (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை) தலா 4.
* மதுரை விமானநிலையம் (மதுரை), திருமங்கலம் (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 3.
* திற்பரப்பு (கன்னியாகுமரி), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மேலூர் (மதுரை), தல்லாகுளம் (மதுரை) தலா 2,

* சாத்தான்குளம் (தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), விருதுநகர் (விருதுநகர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). அடையாமடை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), சிவகாசி (விருதுநகர்), கன்னிமார் (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), சோழவந்தான் (மதுரை), வேதநாதம் (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கல்லிக்குடி (மதுரை), விரகனூர் அணை (மதுரை). நாலுமுக்கு (திருநெல்வேலி) கல்லந்திரி (மதுரை) தலா 1 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+