இன்னைக்கு நைட் மழை விடாது.. சென்னை டூ குமரி வரை 19 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மையம் அறிவிப்பின்படியே நெல்லை, தென்காசியில் பல்வேறு இடங்களில் இரவு 7 மணி முதல் கனமழை விட்டு விளாசியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்றும் சென்னை முதல் குமரி வரை பரவலாக தமிழகத்தில் மழை பெய்தது. சென்னையில் மட்டும் நேற்று பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை குலசை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் இடி, மின்னலோடு கனமழை பெய்தது. இரவு லேசான மழை பெய்தது.

Rain

நெல்லை, தென்காசியில் பலத்த கனமழை

இன்றும் தென் மாவட்டங்களில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் மாலை வரை மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.

நெல்லை மாவட்டத்தின் இடைகால், அம்பாசமுத்திரம், விகே புரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கனமழை விட்டு விளாசியது. தென்காசி மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் கனமழை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது. இதற்கிடையே இரவு 10 மணி வரை தமிழகம் முழுக்க சென்னை முதல் குமரி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: -

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

"சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய 19 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு அறிவிப்பில், "இன்று (21-10-26) காலை 05.30 மணி அளவில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்." என்று கூறப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+