உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில்.. 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரவு 10 மணி வரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் குடிநீர் தேவையை வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீர்த்து வைத்துவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்த மழை பொழியவில்லை. எனவே தமிழ்நாட்டு மட்டுமல்லாது தென்னிந்தியாவே பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டது. குறிப்பாக கேரளாவில் அணைகளுக்கு நீர் போதுமான அளவு வராததால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுபுறம் விளை நிலங்களும் போதுமான நீர் இன்றி வறட்சியடைய தொடங்கின.

கர்நாடகாவின் நீர் பிடிப்ப பகுதிகளில் மழை லேசாக தலையை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதால், அம்மாநிலத்தின் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. எனவே மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்து, அணை கடும் வறட்சியை எதிர்கொண்டது. மேட்டூரில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்னை பீக்கில் இருந்த நிலையில்தான் வடகிழக்கு பருவமழை எட்டி பார்த்தது. கூடவே மிக்ஜாம் புயலையும் இழுத்துக்கொண்டு வந்தது.
புயல் மழையால் வட மாவட்டங்களின் நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. மழை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மழை கோராத்தாண்டவர் ஆடியுள்ளது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை முழுவதும் ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மற்ற மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம் முழுமையாக வடிந்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மிதமான மழை பெய்யும். எனவே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications