அடுத்த 2 மணி நேரத்துக்கு ஒரே மழைதான்.. சென்னை மட்டுமில்ல! தமிழகம் முழுக்க 27 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 27 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் திடீரென சென்னையில் மேகங்கள் திரண்டு மழை கொட்டியது. இதனால் கொளுத்தி கொண்டிருந்த வெயில் அப்படியே குளிர்ந்து ஜில் ஆனது. இதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் இன்று மாலை திடீரென கிளைமேட் மாறியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு ஒரு சில இடங்களில் லேசான மழை கொட்டியது. இதனால் பகல் முழுவதும் கொளுத்தி எடுத்த வெயில் அப்படியே சட்டென தணிந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

rain-will-continue-in-27-districts-across-tamil-nadu-including-chennai-for-the-next-two-hours

27 மாவட்டங்கள் டார்கெட்

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுட கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-05-2025) மற்றும் 12-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஒரு வார கிளைமேட்

13-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14-05-2025 மற்றும் 15-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16-05-2025 மற்றும் 17-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

11-05-2025 முதல் 13-05-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 14-05-2025 மற்றும் 15-05-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

11-05-2025 முதல் 13-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 11-05-2025 மற்றும் 12-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (11-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (12-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 11-05-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. 12-05-2025 முதல் 15-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 11-05-2025 முதல் 15-05-2025 வரை : எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

மழை அளவு (சென்டிமீட்டரில்):

* கல்லிக்குடி (மதுரை) 5,
* திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), (நாகப்பட்டினம்) தலா 4, BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), நாகப்பட்டினம்
* கரியகோவில் அணை (சேலம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 3,
* பெரம்பலூர் AWS (பெரம்பலூர்). திருமங்கலம் (மதுரை), பெரம்பலூர் (பெரம்பலூர்).
* மாரண்டஹள்ளி (தர்மபுரி), பேரையூர் (மதுரை) தலா 2,
* சூரங்குடி (தூத்துக்குடி), காரைக்கால் (காரைக்கால்), காரைக்கால் AWS (காரைக்கால்) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம் : 40.0 செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்): கரூர் பரமத்தி: 22.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட குறைவாகவும் இருந்தது.

வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38-40* செல்சியஸ், வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 35-36* செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28* செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+