"தரமான சம்பவம்!" தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை? வெதர்மேன் முக்கிய அலர்ட்! அப்போ சென்னை கிளைமேட்?
சென்னை: அக்னிநட்சத்திரம் ஆரம்பித்துள்ள நிலையில், மாநிலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக மழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் வெப்பம் பெரியளவில் குறைந்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்றைய தினம் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் மாதமே பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட வர முடியாத சூழலே இருந்தது.

கொட்டும் மழை
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரமும் ஆரம்பித்தது. அக்னி நட்சத்திரத்திற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை என்றாலும், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்தக் கோடை மழையால் தமிழ்நாட்டில் வெப்பம் நன்கு குறைந்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும்... எங்கெல்லாம் மழை பெய்யும்.. சென்னை வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கிளைமேட் எப்படி
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஞாயிற்றுக்கிழமை மழை பெய்த நிலையில், நேற்று திங்கள்கிழமை ஒரு இனிமையான நாளாக இருந்தது. தமிழ்நாட்டின் வானிலை ஆய்வு மையங்களில் மே 5ம் தேதி வரை பதிவான வெப்பத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் 2 இடங்களில் மட்டுமே 38 Cஐ தாண்டின. இன்றைய தினம் வெப்பம் எங்கே அதிகம் என்பதில் மதுரை, ஈரோடு மற்றும் வேலூர் இடையே தான் நெருக்கமான போட்டி இருக்கும். வெப்பம் 38 Cக்கு மேல் பதிவான இடங்கள்: வேலூர் - 38.6 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையம் - 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலையைப் பொறுத்தவரை வேலூர் மற்றும் மதுரை பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கலாம்.. மதுரை விட வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மதுரையில் பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எங்கெல்லாம் மழை
மழையைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்ததால், நேற்று (திங்கள்கிழமை) தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது.. தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களைத் தவிர வேறு எங்கும் பெரிதாக மழை இல்லை. இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) - மதுரையைச் சுற்றியுள்ள ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை வானிலை
சென்னை நகர் பகுதிகளில் சுமார் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.. சென்னை விமான நிலையம் (மீனம்பாக்கம் பகுதியில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இன்று நகரில் வெப்பநிலை 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications