அலெர்ட்! இன்றும் மழை வெளுக்கும்.. நேற்று மழை கொட்டியது எங்கு தெரியுமா? வானிலை மையம் தகவல்!
சென்னை: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவில் இருந்தது. பல நாட்கள் தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. இதற்கிடையே சில நாட்களாக வெப்பம் குறைந்து வந்த சூழலில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று சென்னையின் பல இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இன்று (ஜூன் 21) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று (ஜூன் 20) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை தரமணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை அயனாவரம், டிஜிபி அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை நகரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications