Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Rain: வெயிலுக்கு நடுவே சென்னைக்கு இன்றும், நாளையும் மழை இருக்கு! இடி, மின்னலுடன் கொட்டும்! வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. வெயிலை பொறுத்தவரை 2 முதல் 4 டிரிகி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து கனமழை கொட்டியதால் தென் மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை என தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் கடகடவென நிரம்பியது. இயல்பைவிட அதிகமாகவே மழை பெய்ததாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.

rain-with-thunder-and-lightning-expected-in-chennai-today-and-tomorrow-says-meteorological-departme

ஆனால் கடந்த 5 நாட்களாக தமிழகம் மழை முற்றிலும் குறைந்து கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. இத்தகைய சூழலில் தான் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று (02-11-2025) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (03-11-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். நேற்று (02-11-2025) வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (03-11-2025) காலை 05.30 மணி அளவில் வலுவிழந்தது.

மிதமான மழை பெய்யும்

03-11-2025 மற்றும் 04-11-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06-11-2025 மற்றும் 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-11-2025 மற்றும் 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

03-11-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-11-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் கிளைமேட் எப்படி?

சென்னையில் இன்று (03-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (04-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்: 03-11-2025: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-11-2025 மற்றும் 05-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை அளவு செமீ

* கலவை AWS (ராணிப்பேட்டை) 3 . சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 3. RSCL-3 வளத்தி (விழுப்புரம்) தலா 3 செமீ,
* போளூர் (திருவண்ணாமலை) 2, திண்டிவனம் (விழுப்புரம்) 2, RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) தலா 2 செமீ,
*கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 1, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 1, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 1, செஞ்சி (விழுப்புரம் 1. ஆரணி (திருவண்ணாமலை) 1, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) 1, ஆரணி ARG (திருவண்ணாமலை) 1, RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

* அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம்: 37.4 செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 18.0° செல்சியஸ். என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+