தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுக்க போகுது.. சென்னையில் கிளைமேட் இப்படித்தான்! வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இன்றும், நாளையும் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயில் வெளுத்து எடுக்கிறது. நேற்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயிலே அடித்தது. எனினும் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தூத்துக்குடி, குமரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் 3 செமீ மழை பெய்தது.

rain-with-thunder-and-lightning-expected-in-tamil-nadu-today-chennai-meteorological-department

இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

இன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்திற்கான வானிலை அப்டேட்டில் கூறியிருப்பதாவது:-

தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் புதுவை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை உயர வாய்ப்பு

நாளை மறுநாள் 24-04-2025 முதல் 28-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (22-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (23-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரை 22-04-2025 முதல் 26-04-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 22-04-2025 மற்றும் 23-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 24-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

22-04-2025 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 22-04-2025 முதல் 26-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

அதிகபட்சமாக நெல்லையில் மழை

* நாங்குனேரி (திருநெல்வேலி) 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
* ஆழியார் (கோயம்புத்தூர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.

* கோவில்பட்டி (தூத்துக்குடி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி : 39.5° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 22.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறைந்துள்ளது.

* தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40° செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+