இது வெறும் டிரைலர்தான்.. இனிதான் மெயினே வருதாம்.. டிசம்பரில் அதிக மழைக்கு சான்ஸ்! ஐஎம்டி கணிப்பு
டெல்லி: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடப்பு டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக 31 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பாக 100 சதவீதம் என்றால், 131 சதவீதம் மழை பெய்யும் என்று நீண்ட நாட்கள் அறிக்கையாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டியது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த 28 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் அன்றைய தினமே தமிழகத்தின் வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. இந்த மழை நேற்று வரை தொடர்ந்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக திண்டிவனம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 51 செமீ மழை பதிவானது. இதேபோல் விழுப்புரத்தில் ஒரே நாளில் 50 செமீட்டரும், கடலூரில் 40 செமீட்டரும், புதுவையில் 48 செமீ மழையும் பதிவானது. இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. சாலைகள், தெருக்கள், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. தற்போது டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்த டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட தென் மாநிலங்களில் 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒட்டு மொத்தமாக தென் இந்திய மாநிலங்களில் இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூதலாக மழை பெய்யும். தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இயல்பை விட 31 சதவீதம் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயல்பாக டிசம்பர் மாதத்தில் 100 சதவீதம் மழை பெய்யும் போது, நடப்பு டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 31 சதவீதம் என மொத்தம் 131 சதவீதம் மழை பெய்யும். நீண்ட கால வானிலை அறிக்கையாக டிசம்பர் மாதத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்ற தகவல் இருக்கும். ஒட்டுமொத்தமாக 1971 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணெக்கெடுப்பில் இருந்து இந்த சராசரி மழை அளவு கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications