நேத்து சிவகங்கையை நனைத்த மழை.. இன்னைக்கு எங்கனு பாருங்க! லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் 1 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.2ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (31-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (01-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தொடங்கி பிப்.4ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் 1 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications