மதுரை பகல் நேர வெயில் அளவு இருக்குல்ல.. ராஜஸ்தானில் அதுதான் நள்ளிரவு நேர வெப்பம்! அனலை கக்கும் சன்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் கிழக்கே ரெமல் புயலால் மழை அடித்து ஊற்றுகிறது. மேற்கே ராஜஸ்தானில் அதீத வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் ஜோத்பூர், பிகானேர் மற்றும் கோட்டா ஆகிய பகுதிகளில் 'வெப்ப அலை மற்றும் தீவிர வெப்ப அலை' நிலைகள் பதிவாகியுள்ளதாக ஜெய்ப்பூரில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபலோடியில் அதிகபட்ச வெப்பநிலை 49.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்பை விட 6.8 டிகிரி செல்சியஸ் அதிகம். இது வெப்பத்தின் தீவிரத்தை படம் போட்டு எடுத்துக்காட்டுகிறது. மருத்துமனைகளில் கடுமையான வெப்ப பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவத் துறை நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.

இரவு நேரத்தில் கோட்டா மாமட்டத்தில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது வெயில் கக்கும் மதுரையில் நண்பகலில் அடிக்கும் வெயிலுக்கு இணையானது இது. இரவு நேர வெப்ப நிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் தொடர்ந்து, கடுமையான வெப்பம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அஜ்மீரில் உள்ள சரானா கிராமத்தில் வசிக்கும் 40 வயதான மோதி சிங் வெப்பத் தாக்குதலால் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ரவி பிரகாஷ் மாத்தூர் தெரிவித்தார். ருபன்கர் கிராமத்தில் டிராக்டரில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது சிங்கின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் முதலில் ரூபாங்கருக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் கிஷன்கர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டாராம்.
ராஜஸ்தான் நகரங்களில் வெப்பநிலை
| நகரம் | அதிகபட்ச வெப்பநிலை (°C) |
|---|---|
| பலோடி | 49.8 |
| பார்மர் | 49.0 |
| பிகானேர் | 48.6 |
| ஜெய்சால்மர் | 48.5 |
| ஸ்ரீ கங்காநகர் | 47.8 |
| சுரு | 47.6 |
| பிலானி | 47.4 |
| கோட்டா | 47.1 |
| ஜோத்பூர் | 46.4 |
| அஜ்மீர் | 46.2 |
| பில்வாரா | 46.0 |
'வெப்ப அலை மேலாண்மை' என்ற அறிவிப்பின்கீழ், மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளை கண்காணிக்கவும் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்டங்களில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைப்பார்கள்.
கடுமையான வெப்ப பாதிப்புகளை தடுப்பது, பரிசோதனை, மருந்து மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் இவர்கள் மூலம் கவனம் செலுத்தப்படுகிறது.
டெல்லியில் கடுமையான அனல் காற்றுடன் கடும் வெப்பம் நிலவி வருகிறது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திங்கட்கிழமை, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ், இது இயல்பை விட 2.6 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும். காலை 8:30 மணியளவில் ஈரப்பதம் 48% ஆக இருந்தது. டெல்லியில் இன்று வானம் மேகமூட்டம் இல்லாமல் இருக்கும், கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications