வெயிலுக்கு மத்தியில் ராமேஸ்வரத்தில் வெளுத்துக் கட்டிய மழை.. 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 3 செ.மீ மண்டபத்தில் 2 செ.மீ மழை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ராமேஸ்வரம் மழையால் குளிர்ந்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. பருமழைக்கு பின்பு வெயில் அடிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Weather tamil nadu chennai

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் பகலில் வெயிலும் இரவில் பனிப்பொழிவுமாக வானிலை நிலவி வந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதுமே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து பிறகு பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் ஆறாக ஓடி ராமேஸ்வரம் நகராட்சி முன்பு மழைநீர் தேங்கியது.

ஒரு மாதமாக வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது நன்றாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் தேங்கிய நீரில் நடந்து சென்று சிரமத்திற்கு உள்ளாகினர்.

கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாத​புரம் உள்ளிட்ட 9 மாவட்​டங்​களில் நாளை (பிப்ரவரி 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் தாக்கத்தால் தென்​தமிழக கடலோர மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​களி​லும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழக மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் வறண்ட வானிலை நிலவக்​கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்​படும்.

நாளை தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, புதுக்​கோட்டை, ராமநாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. மேலும், இதே மாவட்​டங்​களில் சில இடங்​களில் வரும் மார்ச் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்​தில் இன்று அதிகபட்ச வெப்​பநிலை ஓரிரு இடங்​களில் 35.6-37.4 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும். நாளை முதல் வரும் 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்​பநிலை சற்றே குறையக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதிகபட்ச வெப்​பநிலை 89.6-91.4 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 73.4-75.2 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும்.

தென்​தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்​கடல் பகுதி​களில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை இன்றும், நாளை​யும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+