நினைச்சாலே பதறுது.. காரணமே வேற.. காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டு மழை ஒரே நாளில் கொட்டியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கடலோர பகுதியான காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை 93 செமீ மழை ஒரே நாளில் கொட்டி இருப்பதன் பின்னணியில் உள்ள சுற்றுச்சூழல் காரணத்தை விளக்கியுள்ளார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

Reason behind the 93 cm rain in a day in the Kayalpattinam

அதன்படி நேற்று 4 மாவட்டங்களிலில் அதி பயங்கர கனமழை கொட்டித்தீர்த்தது. இருப்பதிலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதியான காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 933 மில்லி மீட்டர் மழை பொழிந்து இருக்கிறது. திருச்செந்தூரில் 679 மிமீ, ஸ்ரீவைகுண்டம் 618 மிமீ, கோவில்பட்டியில் 495 மிமீ, சாத்தான்குளத்தில் 466 மிமீ, தூத்துக்குடி 361 மிமீ, கடம்பூர் 348 மிமீ, ஒட்டப்பிடாரம் 356 மிமீ, கீழாராசாடி 344 மிமீ, குலசேகரபட்டினம் 326 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிடுகையில், "தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. மழை பொழிந்து உள்ளது. இது அப்பகுதியில் ஒரு ஆண்டு பொழியும் மழையை விட அதிகம். 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், கடந்த 1992 ஆம் ஆண்டில் மாஞ்சோலை அருகே காக்காச்சியில் பதிவான 965 மில்லி மீட்டருக்குப் பிறகு 2 வது அதிக மழையும் இதுவாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் குறிப்பிட்டு உள்ளதாவது, "காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 93 செ.மீ மழை பெய்துள்ளது, இது அந்த ஊரின் வருடாந்திர மழைபொழிவை விட அதிகமாகும். தமிழ்நாட்டில் சமவெளியில் ஏற்பட்ட மிக அதிக கன மழைப்பொழிவு இதுதான். மலைப்பகுதியான காக்காசியில் (மாஞ்சோலை) 1992 ஆம் ஆண்டு 96.5செமீ மழை பதிவாகியுள்ளது.

குறைந்த கால இடைவெளயில் அதிதீவிர கனமழை என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு கூறு, அதுவும் எல்-நினோ/சூப்பர் எல்-நினோ காலகட்டத்தில் இதைப்போன்ற தீவிர நிகழ்வுகளை அதிகம் எதிர்பார்க்கவேண்டும். இதைப்போலவே எல்லாமும் தீவிரமாக இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+