திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்.. 5 நிமிடத்திற்குள் வாபஸ் பெற்ற வானிலை மையம்.. என்ன நடந்தது?
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் கொடுக்கப்பட்ட நிலையில், 5 நிமிடங்களுக்குள் திரும்பி பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே 35 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பட்டாளம், சத்யா நகர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டது. ஆனால் அது வாபஸ் பெறப்பட்டு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரிக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மேற்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வார்னிங்கை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. அதாவது கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications